About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 27, 2012 / பகுதி: செய்தி /

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற “ வன்னிமயில் 2011’’ விருதுக்கான நடனப்போட்டி!

பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை கடற்கரும்புலி அங்கையர்க்கண்ணியின் சகோதரர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. முதலில் கீழ்ப்பிரிவுக்கான போட்டிகள் ஆரம்பமாகியது. சின்னம் சிறு மலர்கள் விடுதலைப்பாடல்களுக்கு ஏற்றவாறு உடையணிந்து அழகாக வடம் பிடித்தனர்.

உற்சாகமாகவும், சந்தோசமாகவும் பங்கு பற்றி போட்டி நிகழ்வை ஆரம்பித்த இம்மழலைச் செல்வங்கள் முறையே எட்டு குழந்தைகள் பங்கு பற்றியிருந்தனர். இப்போட்டிகள் முறையே கீழ்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவுகளுக் கான போட்டிகள் என நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியாளர்களும் தமது அதியுச்சத்திறமைகளை தமது நடனங்களில் காட்டியிருந்தனர். இப்போட்டியாளர்கள் தெரிவு செய்த பாடல்கள் யாவும் மாவீரர்கள் முதல்கொண்டு எமது வீரம், தியாகம், எழுச்சி, மண்பற்று, மொழிப்பற்று, கோபம், தாகம், உறுதி, என பல்வேறு அம்சங்களை கொண்டவைகளாக இருந்திருந்தன.

நிகழ்வின் நடுவிலே மாநகரத்தின் முதல்வர் ஸ்ரீபன் கத்தினியோ அவர்கள் வந்து கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது சிறிய உரையையும் ஆற்றிச்சென்றிருந்தார். அவருக்கு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் 2012ம் ஆண்டின் நினைவாக பரிசுப்பொருள் ஒன்றினை பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் வழங்கி மதிப்பளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து போட்டிகள் யாவும் மிகமிக விறுவிறுப்பாகவும், மண்டபம் நிறைந்த மக்கள் வருகையாகவும் காணப்பட்டது. சிறப்பு நடனப்போட்டியில் சிறப்பு நடனம் ஒன்றை கடந்த 8ம் திகதி நடைபெற்ற தெரிவுப்போட்டியில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய திருமதி. நிஸ்யந்தி அருள்ராஜா சர்மா அவர்கள் “ஏ தமிழினமே சேரசோழ செந்தமிழ் பாண்டியன் பிரபாகரனே’’ என்ற பாடலுக்கு ஏழுச்சி நடனத்தை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குழு நடனங்களுக்கிடையேயான போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளின் நடுவர்களாக சுவிஸ்நாட்டில் இருந்து நாட்டிய கலைமணி திருமதி. வா. ஞானசுந்தரி அவர்களும், பிரித்தானியாவில் இருந்து இருவர் நாட்டிய விசார்த் சிறீமதி.

யோ. nஐயந்தி அவர்களும், வித்யா பூசணம் செல்வி கிருசாந்தி விசுவலிங்கம் அவர்களும் கடமையாற்ற புள்ளிக்கணிப்பாளராக கணக்கியல் ஆசிரியர் லச்சுமணன் அவர்களும், கண்காணிப்பாளராக சங்கீத பூசணம் மிருதங்க வித்துவான் சேயோன் ஆசிரியர் அவர்களும் கடமையாற்றியிருந்தனர். நடுவர்கள் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளரினாலும், செவரோன் மாநகர ஆலோசகரும் தமிழீழ மக்களின் நண்பருமாகிய திரு.பத்றீசியோ அவர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மண்டபம் நிறைந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாணவர்களின் சந்தோசகூக்குரலுக்கும், கரகோசங்களுக்கும் மத்தியில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பெண்கள் அமைப்பினர் மற்றும் உப அமைப்பின் பொறுப்பாளர்களுடன் கடந்த 2008, 2010 ல் வன்னிமயிலாக தெரிவு செய்யப்பட்டவர்களும், சான்றிதழ்களும், நினைவுப்பரிசில்களும் வழங்கியிருந்தனர். சிறப்பாக இப்போட்டியில் அதிக மாணவர்களைப் பங்குபற்ற வைத்த ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இரவு 9.30 மணிக்கு வன்னிமயில் 2011 விருதுக்கான வெற்றி பெற்ற போட்டியாளர் அறிவிக்கப்பட்டது. வெண்திரையில் கணனித் தொழிநுட்பவியலாளர்களின் கலப்பு திறமையினை கண்டதோடு வன்னிமயில் 2011ம் ஆண்டு விருதுக்கான மாணவியின் நடனம் ஒளிபரப்பாகிய போது போட்டியாளர்கள் அத்தனை பேரும் கைகளைத்தட்டி சந்தோச மிகுதியால் அவர்களின் கூக்குரல் அடங்குவதற்கு சில நிமிடங்கள் எடுத்தன. மேடைக்கு அழைக்கப்பட்டு பிரான்சு வன்னிமயில் 2011க்கான விருதினை பெற்ற செல்வி சபித்தா மகேந்திரராஜா நடுவர்களாலும், கடந்த 2008, 2010 விருதினைப்பெற்ற வன்னிமயில்களாலும் மதிப்பளிக்கப்பட்டார்.

இப் போட்டி நிகழ்விற்கு ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபம் மரங்களால் வன்னிக்காடு போன்றதொரு இயற்கை செழிப்பினை உணர்த்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து நடனநிகழ்வுகளையும் கலை பண்பாட்டுக்கழகக் கலைஞரும், சிறந்த அறிவிப்பாளர்களில் ஒருவரான செல்வன் வினோத் அவர்களும், அவருடன் இணைந்து திருமதி. ஞா. சிறீதரன் அவர்களும் எழுச்சியாகவும், விறுவிறுப்பாக போட்டி நிகழ்வை கொண்டு சென்றிருந்தனர்.

பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்பட்டு வரும் “ வன்னிமயில் விருதுக்கான 2011 இற்கான போட்டி எமது தாயக தாரகப் பாடலான நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும், எமது தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதி மொழியுடன் இனிதே நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு :-


வன்னிமயில் 2011 போட்டியில் வெற்றிபெற்ற பிரிவுகளும், மாணவர்களின் பெயர்களும் :-
1. கீழ்ப்பிரிவு
1. முதலாம் இடம் : செல்வி. லேனா வசந்தகுமார்
2. இரண்டாம் இடம் : செல்வி. பார்க்கவி மகேந்திரராஜா
3. மூன்றாம் இடம் : செல்வி. ஆசிகா ஜெயந்தன்
2. மத்தியபிரிவு
1. முதலாம் இடம் : செவ்வி. சிந்தியா சிவதாஸ்
2. இரண்டாம் இடம் : செல்வி. விவேக்கா குலநாதன்
3. மூன்றாம் இடம் : செல்வி. நிதுசா சதீஸ்வரன்
3. மேற்பிரிவு
1. முதலாம் இடம் :செல்வி. திவ்வியா சீராளன், செல்வி. ஆதாங்கனி திருஞானசுந்தரம்
2. மூன்றாம் இடம் : செல்வி. சிவப்பரியா சிவதாஸ்
4. அதி மேற்பிரிவு
1. முதலாம் இடம் : செவ்வி. தாக்சாயினி தங்கத்துரை
2. இரண்டாம் இடம் : செல்வி. நிந்துசா செல்வரதன்
3. மூன்றாம் இடம் : செல்வி. அகல்யா நல்லையா
5. அதிஅதி மேற்பிரிவு :-
1. முதலாம் இடம் : செல்வி: சுவேதிகா சந்திரபாலன்
2. இரண்டாம் இடம் : செல்வி: அபிநயா நல்லையா
3. மூன்றாம் இடம் : செல்வி: சிறோமி இரத்தினதுரை
6. சிறப்புப்பிரிவு:
1. முதலாம் இடம் : செல்வி : வினு காயத்திரி குணநாதன்
2. இரண்டாம் இடம் : செல்வி: மிதிலா அரியபுத்திரன்
செல்வி: தர்சா மகாராசா
ஆகியோரும்
வன்னிமயில் 2011 குழு நடனத்தில்
 கீழ்பிரிவில்
குழு இலக்கம் 07 முதலாம் இடம் : நந்தியார் தமிழ்ச்சோலை
 மத்திய பிரிவில்
குழு இலக்கம் 06 முதலாம் இடம் : திறான்சி தமிழ்ச்சோலையும்
குழு இலக்கம் 05 இரண்டாம் இடம் : செவரோன் தமிழ்ச்சோலையும்
குழு இலக்கம் 08 மூன்றாம் இடம் : நந்தியார் தமிழ்ச்சோலையும்
 மேற்பிரிவில் :
குழு இலக்கம் 03 முதலாம் இடம் குசான்வில் தமிழ்ச்சோலையும்
குழு இலக்கம் 04 இரண்டாம் இடம் செவரோன் தமிழ்ச்சோலையும்
குழு இலக்கம் 02 மூன்றாம் இடம் பரிஸ் 13 தமிழ்ச்சோலையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.