About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 27, 2012 / பகுதி: செய்தி /

யாழில் படைமுகாமில் இருந்து யுவதியின் எலும்புக்கூடு!

யாழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதிஒருவரின் உடலம் படையினர் இருந்த முகாமின் வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.யாழ் தென்மராட்சி மறவன் புலவு,தனங்கிளப்பு பகுதியில் கடந்த ஆண்டுஇறுதிப்பகுதியில் காணமால் போன யுவதிஒருவரின் எலும்பு கூடு படையினர் இருந்த முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் 28 அகவையுடைய சுப்பிரமணியம் அற்புதமலர் என்ற பெண் மறவன்புலவு பகுதியில் காணாமல் போயிருந்தார்.இன்னிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட படையினரின் முகாம் மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை நேற்று காலை கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் உடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர்.
மீடக்கப்பட்ட உடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனாவைத்தயசாலையின் பிரேத அறையில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி மிக அண்மைக்காலப்பகுதியிலேயேபடையினரின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுமக்களது பாவனைக்கென 16 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.