About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 27, 2012 / பகுதி: செய்தி /

தமிழ் மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை..! மீண்டும் வெறியாட்டங்கள் ஆரம்பமா...?

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் நேற்று இரவு வரை சம்பவ இடத்திலே இருந்ததாகக் கூறப்பட்டது. மாணவி கடத்தப்பட்டுப் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவியின் சடலம் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய அவர் மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்பதை இப்போது உறுதியாக கூறமுடியாது எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர்  தகவல் தருகையில் "மாணவி டிலக்சனா அவரது வீட்டுக்கு மிக அருகில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். சக்கோட்டைப் பழைய வேதக் கோயிலடிக்கு அருகில் அவரது வீடு உள்ளது. வீட்டில் இருந்த மாணவியின் தாயும் தகப்பனும் அலுவல் நிமித்தம் வெளியே சென்று விட்டனர். இந்த வேளையில் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். மாலை 6.30 முதல் மாலை 6.45 மணி வரையான இடைப்பட்ட நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும். வீட்டுக்கு மிக அருகில் வைத்து மாணவியை யாரோ கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அவர் அருகில் உள்ள ஆள்களற்ற வீடொன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடலெங்கும் நகக்கீறல் காயங்கள் காணப்பட்டன. அவரது ஆடைகளும் கலைந்திருந்தன. அவர் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெரியாது.
அலுவல் முடிந்து வீடு திரும்பிய தாயும் தகப்பனும் மாணவியை காணாது தேடியுள்ளனர். இந்த வேளையிலேயே அவரது சடலம் அருகிலுள்ள வீடொன்றில் இருந்தமை தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸாரும் படையினரும் அங்கு வந்து குவிந்தனர், என்றார்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.