
லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர்கள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இடைக்கால அரசின் படை வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டின் தலைநகரனா திரிபோலி மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெங்காஸி ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
பானிவாலிட் நகரத்திலிருந்தே தாக்குதல் நடத்த ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலில் சுமர் 150 கடாபி ஆதரவுப் படையினரர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்கள் கடாபி அரசாங்கத்தின் பச்சை நிறக் கொடியையும் தங்களது கைகளில் ஏந்தியிருந்ததாக லிபிய இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். __