About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 25, 2012 / பகுதி: இந்திய செய்தி /

தமிழக மீனவர்களை விரட்டிய கடற்படை-குண்டு வீசிய இலங்கை மீனவர்கள்!

தமிழக மீனவர்களை நேற்று இரவு இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து வெறித்தனமாக தாக்கியுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினர் ஒருபக்கம் தமிழக மீனவர்களை விரட்டியடிக்க மறுபக்கம் தப்பி வந்த மீனவர்களை இலங்கை மீனவர்கள் சூழ்ந்து கொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் கூட சாட்டிலைட், ரேடார் என சகல வசதிகளையும் கொண்ட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ இதுகுறித்து கண்டு கொள்ளாமல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியாவைச் சேர்ந்த மீனவர்களைக் காக்க முயலாதது பெரும் வருத்தத்தையும், வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரும், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் - இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுதான் வேதனையானது - தாக்கி வருகின்றனர். இதைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இந்திய அரசு முனைப்பான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வாயை மூடிக்கொண்டுள்ளது.

இதனால் திமிரெடுத்த இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி அடித்து விரட்டி வருகின்றனர்.

நேற்று முன்தினம்தான் கற்களை வீசி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

682 விசைப் படகுகளில் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக்ச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.

இதையடுத்து தப்பி வந்த மீனவர்களை திடீரென இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசி தமிழக மீனவர்களைத் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் இணைந்து நடத்திய இந்த வெறித்தனமான தாக்குதலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதட்டமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.