Jan 22, 2012
/
பகுதி: விளையாட்டு
/
கடத்தல் கும்பலுக்கு உதவிய கால்பந்து வீரர் கைது
மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் உமர் ஓர்சிஸ் (வயது 35). இவர் சர்வதேச கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து ஓய்வு பெற்றவர். கடத்தல் கும்பலுக்கு உதவியாக செயல்பட்டதாக இவரை மெக்சிகோ காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து அரசு அதிகாரி கூறுகையில், கடத்தல்காரர்களிடம் இருந்து 2 பேரை மீட்பதற்கு ஒரு மில்லியன் பெசோ (60 ஆயிரம் ஈரோ) பேரம் பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டோம் என தெரிவித்தார்.