About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 15, 2012 / பகுதி: உலக வலம் /

4000 பேருடன் உல்லாச கப்பல் கவிழ்ந்தது!

4000இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று  இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரை காணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது.
கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200  பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர்  பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது.
இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர்.
கப்பலிலிருந்த பயணிகளும் 1000 ஊழியர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் சுமார் 200 பேர் இன்னும் கப்பலில் இருப்பதாக இன்று காலை  அதிகாரியொருவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
பயணிகள் இரவு உணவு உட்கொள்ள அமர்ந்திருந்தபோது கப்பல் விபத்துக்குள்ளாகியதாக பயணியொருவர் தெரிவித்துள்ளார். கப்பல் சரியத் தொடங்கியதையடுத்து உயிர்தப்புவதற்காக கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கப்பல் 5 உணவு விடுதிகள், 13 மதுபான நிலையங்கள், 4 நீச்சல் தடாகங்கள், என்பனவற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்