About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 13, 2012 / பகுதி: கட்டுரை /

மிருகங்களின் பண்ணை ‘எல்லா மிருகங்களும் சமமானது, ஆனால் சில மிருகங்கள் மற்றவையைவிட வித்தியாசமானவை’

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜோர்ஜ் ஓவேலினால் மிருகங்களின் பண்ணை என்ற கதைப் புத்தகம், நாவல் உலகமகா யுத்தத்தின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் ஆட்சி பற்றி எழுதி வெளியிடப்பட்டது.

ஜோர்ஜ் ஓவேலின் இந்தியாவில் உள்ள பெங்களுரில் 1903ம் ஆண்டு யூன் மாதம் 25ம் திகதி பிறந்த ஒரு ஆங்கிலேயர். இவரது பிறப்பு பெயர் ஏரிக் ஆதர் பிளே. இவர் அரசியல் மாற்றத்திற்கான ஒரு செயற்பாட்டாளர், கட்டுரையாளர், எழுத்தாளர். அத்துடன் தனது ஆக்கபூர்வமான விமர்சனங்களால் பிரபலியமானவர்.

பிரபலமான எழுத்தாளர்கள் நாவலாசிரியர்களைப் பற்றிச் சிந்திக்கும் வேளையில் எனது மனதில் இந்திய உப கண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோர்ஜ் ஓவேல், சல்மான் ருஸ்டி அத்துடன் பங்களாதேசை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ருதீன் ஆகியோரை நினைவுபடுத்திக் கொள்வேன்.

இதில் தற்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களான சல்மான் ருஸ்டியும், தஸ்லீமா நஸ்ருதீனும் இஸ்லாம் சமயத்தைப் பற்றிய தமது கருத்துக்களை எழுதியதால் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு அதிலிருந்து தப்பி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.  ஜோர்ஜ் ஓவேலின் மிருகங்களின் பண்ணை, 2005ம் ஆண்டுவரை முதல் நூறு விற்பனை நூல்களில் முன்னணியில் விற்பனையாகும் நாவலாக விளங்கியது. இங்கு சல்மான் ருஸ்டி எழுதிய ‘சாத்தானின் கவிதை அல்லது தஸ்லீமா நஸ்ருதீன் எழுதிய ‘வெட்கம்’ ஆகிய நாவல் பற்றி எழுத முடியவில்லை.

எனது இளமைக்காலத்தில் மாக்ஸிசம், லெனினிசம், மாவோயிசம் பற்றிய புத்தகங்களை வாசிக்கும் எனது அக்கறையை கவனித்த எனது தகப்பனார், இவற்றில் அக்கறை கொள்ள வேண்டாமென எனக்கு கூறுவதற்குப் பதிலாக, ஜோர்ஜ் ஓவேலின் மிருகங்களின் பண்ணை பற்றிக் கூறுவார். எனது தகப்பனாரின் கதைகளைக் கேட்டு விட்டு எனது மனதில் மிருகங்களின் பண்ணை என்பது ஒரு கற்பனைக் கதையென மனதில் எண்ணிக் கொள்வேன். இதை நான் மட்டுமல்ல இளமைத் துடிப்பான வயதில் சகலரும் காதல் விவகாரம் உட்பட யாவற்றையும் பெற்றோரின் அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்வது வழமையானது.

பாரிஸ் வாழ்வு

எனது பிரான்ஸ் வாழ்க்கையை பாரிசில் ஆரம்பித்த சில காலங்களில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்களும், தனது புகலிட வாழ்வை பாரிசில் ஆரம்பித்தார். மாலை நேரங்களில் நாம் உரையாடும் வேளைகளில் தனது பத்திரிகைத் துறையின் அனுபவங்களை, விசேடமாக கொழும்பில் ஏரிக்கரை, ரைம்ஸ் ஒப் சிலோன் ஆகிய நிறுவனங்களில் தன்னுடன் பணியாற்றிய பத்திரிகைச் சகாக்கள், ஆசிரியர்களான தாசி வித்தாச்சி, றேஜி மைக்கல், மேர்வின் டீ சில்வா ஆகியோர் பற்றியும் கதைப்பது வழக்கம்.

திரு சிவநாயகம் அவர்களை பாரிசில் அவருடன் அறிமுகமானவர்கள் ஐயா என மிக அன்பாக அழைப்பார்கள். இவர் தனது இறுதிக் காலத்திலும் துணுக்குகள், பகிடிகள், சுவாரசியம் உள்ள கதைகளை தொடர்ந்து கொண்டிருந்தார். கடந்த நவம்பர் 29ம் திகதி ஐயாவின் முதலாவது நினைவுதினம்.

பாரிசில் வாழ்ந்த ஐயாவிற்கு பிரெஞ்சு மொழி பெரும் தடைக்கல்லாக இருந்தது. இதனால் இவருடைய பிரெஞ்சு நிர்வாக வேலைகளுக்கு ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழி
பெயர்ப்பாளராகக் கடமையாற்றினேன். ஒருநாள் சிவநாயகம் ஐயாவுடன் ஒரு வைத்தியருடனான சந்திப்பிற்குக் காத்திருந்தோம். அவ்வேளையில் நாங்கள் இருவரும் எமது கடந்த காலங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் ஐயா என்னிடம் கூறினார் ‘எனக்கு இப்பொழுது சாத்திரத்தின்படி துன்பகாலம். உடம்பில் பல்லைத் தவிர சகல பகுதிகளும் பிரச்சினை என்றார். நல்லவேளை கட்டின பல்லு ஆகையால் அதில் பிரச்சினையில்லை என்று கூறிவிட்டு, இப்ப உள்ள துன்ப காலத்திற்கு கட்டின பல்லும் கொதிக்குமோ தெரியாது’ என்றார்.

இதைக் கேட்ட நான் சத்தமாக சிரித்தே விட்டேன். இதைக் கவனித்த பிரெஞ்சுகாரர் நீங்கள் நல்ல பகிடிக்காரரானல் பிரெஞ்சு தொலைக்காட்சியில் சந்தர்ப்பம் வாங்கித்தரலாம் என்றார்.
ஒரு நாள் காரியாலயத்தில் விரும்பாத சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. இவ் விடயம் ஐயாவிற்குப் பிடிக்கவில்லை. அன்று மதிய உணவுக்கு சென்ற ஐயா சிவநாயகம் சில மணிநேரம் தாழ்த்தியே வந்தார். காரியாலயத்திற்கு வந்ததும் அவரது வழமையான சிரிப்புடன் ‘கிருபா உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வாங்கி வந்திருக்கிறேன் என்றார்’. அன்று மாலை அந்த அன்பளிப்புப் பொருளை என்னிடம் கொடுத்தார்.

ஆங்கிலத்தில் ‘மிருகங்களின் பண்ணை’ (Animal Farm) என்ற நாவல் கதை. இதை என்னிடம் கொடுத்துவிட்டு, நீங்கள் இதை படித்து முடித்ததும் இதை தமிழில் மொழி பெயர்த்து எழுதுங்கள் என்றார். இன்றுவரை தமிழில் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இக்கதை (மிருகங்களின் பண்ணை) யைப் தமிழில் சொல்ல வேண்டிய சிலருக்கு சொல்லியுள்ளேன்.

நாவல்

மிருகங்களின் பண்ணை என்ற நாவல், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் காலத்து எதேச்சையான போக்கையும், மோசடிகளையும் மிருகங்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு விபரிக்கிறது. இதனால் ஜோர்ஜ் ஓவேலினால் பிரித்தானியாவில் இதை பிரசுரிப்பதில் சில தடைகள் இருந்தன. காரணம் இரண்டாம் உலகமாக யுத்தத்தின் பொழுது சோவியத் ஒன்றியம் பிரித்தானியாவுடன் ஒரு நட்பு நாடாக இருந்தது. இறுதியில் இந் நாவல் 1945ம் ஆண்டு பிரித்தானியாவிலும் 1946ம் ஆண்டு அமெரிக்காவிலும் பிரசுரமானது.

ஏழு கட்டளைகள்

இந்த நாவலில் மிருகங்களினிடையே நல்ல ஒழுக்கம், ஒற்றுமை அத்துடன் மிருகங்களின் அடையாளங்களை பேணுவதற்காக ஏழுகட்டளைகளை மிருகங்களின் பண்ணையில் உள்ள மிருகங்கள் யாவும் இணைந்து உருவாக்கினார்கள். அத்துடன் இந்தக் கட்டளைகள் மூலம் மிருகங்கள் மனிதர்கள் இடையே உள்ள பலவீனமான பழக்க வழக்கங்கள் பின் பற்றாதிருக்க முடியுமென எண்ணினார்கள். இதற்குள் ஒரு முக்கிய பிரச்சினை என்னவெனில், எல்லா மிருகங்களிலும் இந்த ஏழு கட்டளைகளையும் நினைவுகொள்ள முடியாத காரணத்தினால் இவற்றை ஒரு சுலோகமாக்கினார்கள். அதாவது ? நாலுகால்கள் உள்ளவை நல்லவை, இரண்டு கால்கள் உள்ளவை கூடாதவை?. இறகுகளும் கால்களாக கணிக்கப்பட்டன.

ஏழு கட்டளைகளாவன :
1) இரண்டு கால்களில் செல்பவை யாவும் எமது எதிரிகள்.
2) நாலுகால்கள் உள்ளவையும், இறகுகள் உள்ளவையும் நண்பர்கள்.
3) மிருகங்கள் உடைகள் அணியப்படாது.
4) ஒரு மிருகமும் கட்டிலில் நித்திரை செய்யக் கூடாது.
5) மிருகங்கள் மது அருந்தக் கூடாது.
6) மிருகங்கள் மிருகங்களைக் கொல்லக் கூடாது.
7) எல்லா மிருகங்களும் சமமானவை.

இதில் வேடிக்கை என்னவெனில் மிருகங்களின் ஒற்றுமை, அடையாளத்தைப்பேண உருவாக்கப்பட்ட ஏழு கட்டளைகளையும், மிருகங்களின் தலைவராக காட்சியளித்த நெப்போலியன் என்ற பன்றி, தனது பன்றி சமூகத்தின்  இலாபத்தை மனதில் கொண்டு ஏதேச்சையாக மற்றைய மிருகங்களின் ஒத்தாசையில்லாது, சில கட்டளைகளை மாற்றிவிட்டது.

திருத்தியமைக்கப்பட்ட கட்டளைகளாவன :
1) கட்டிலில் போர்வைகளுடன் எந்த மிருகமும் தூங்கக் கூடாது.
2) மிருகங்கள் அளவுக்கு மிஞ்சி மது அருந்தக் கூடாது.
3) மிருகங்களை மிருகங்கள் காரணமின்றி கொல்லக் கூடாது.

அத்துடன் அவர்களது சுலோகமும் மாற்றப்பட்டது.
‘எல்லா மிருகங்களும் சமமானவை. ஆனால் சில மிருகங்கள் மற்றவையைவிட வித்தியாசமானவை. இதேவேளை நாலு கால்கள் உள்ளவை நல்லவை, இரண்டு கால்கள் உள்ளவை பறவாயில்லை. ’காரணம் பன்றிகள் மனித வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இம் மிருகங்களின் பண்ணையில் தலைவராக இருந்த நெப்போலியன் என்ற பன்றி பன்றிக் குடும்பத்தின் நன்மைகளைக் காப்பாற்றுவதையே தலையாய கடமையாகக் கொண்டிருந்தது. இதனால் மற்றைய மிருகங்கள் நெப்போலியனால் தினமும் சுரண்டப்பட்டு வந்தார்கள். இவர்களுடன் இணைந்து வேலை செய்த நாய்கள் கூட நெப்போலியனைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் மீது வசை பாடவும், தேவை ஏற்படும் வேளைகளில் கொலைகள் செய்யவும் பாவிக்கப்பட்டார்கள். நெப்போலியனை நம்பி வாழ்க்கை நடத்திய வண்டியிழுக்கும் குதிரை இறுதியில் நெப்போலியனால் கொலை செய்யப்பட்டார்.

கதா பாத்திரங்கள்.

ஜோசேப் ஸ்ராலினால் நெப்போலியன் என்ற பெயரில் பன்றி. இவரே மிருகங்களின் பண்ணையின் தலைவர். பின்கி என்ற பன்றி, நெப்போலியனின் உணவில் நஞ்சூட்
டப்படாமல் ருசி பார்பாவர். சிகுலார் என்ற பன்றி பன்றிகளின் சார்பாக மிருகங்களிடையே பிரச்சாரம் செய்வதும், மிருகங்களின் பண்ணை பற்றி பொய்யான புள்ளிவிபரங்களை பரப்புபவர். சிநோபோல் என்ற பன்றி நெப்போலியன் என்ற பன்றியை சரிக்கு சரியாக எதிர்ப்பதிலும், மிகவும் பொது அறிவைக் கொண்ட பன்றியாக காணப்பட்டது. போக்சர் என்ற வண்டி இழுக்கும் குதிரை என்றும் மிருகங்களின் பண்ணைக்காக இரவு பகலாக உழைப்பதுடன் தானாக சுதந்திரமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றதுடன், தனது சுலோகமாக நெப்போலியன் என்றும் நியாயமானவர் என்ற சிந்தனை கொண்டது. கிலோவர் என்ற வண்டி இழுக்கும் பெண் குதிரை போக்சரின் உற்ற நண்பரும், கிலோவர் என்றும் நெப்போலியனும் அதனுடைய குழுவும் ஏழு கட்டளைகளை மீறுவதாக அபிப்பிராயம் கொண்டிருந்தது.

மொறில் என்ற வெள்ளை ஆடு என்றும் ஏழு கட்டளைகளை கிலோவருக்கு வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தது. பென்ஜமின் என்ற கழுதை, யார் மிருகங்களின் பண்ணையின் தலைவராக இருந்தாலும் பிரச்சனைகள் இருக்கும் என்ற அபிப்பிராயம் கொண்டதுடன் பன்றிகளை எதிர்ப்பதில் தயக்கம் கொண்டிருந்தது. விம்பர் என்ற மனிதச் சட்டத்தரணியை நெப்போலியன் மிருகங்களின் பண்ணையை சமுதாயத்தில் நிலைப்படுத்த அமர்த்தப்பட்டதிலிருந்து மிருகங்களுக்கும் மனிதர்களுக்கு மிடையிலான தொடர்பு ஆரம்பமாகியது.

இதனால் மிருகங்களுக்கிடையில் தடுமாற்றங்கள் உருவாகின. மிருகங்களின் பண்ணையில் இன்னும் பல கதாபாத்திரங்கள் சிறு சிறு பாத்திரங்கள் வகிக்கின்றன.
இவ் நாவலின் முடிவில் மிருகங்கள் எப்படியாக சுரண்டல் வாழ்க்கை வாழ்கின்றன என்பது தெளிவாகின்றன. மிருகங்களின் பண்ணையில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை மற்றைய மிருகங்களுக்கு அல்லது பன்றிகளின் நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அத்துடன் நாவல் முக்கியமாகக் கூறுவதென்ன வெனில், தமது மற்றைய பிரஜைகள், அங்கத்தவர்களைச் சமனாக நடத்தத்தவறும் பட்டசத்தில் நிச்சயமாக சமுதாயத்தில் சர்ச்சைகள் காணப்படும் என்பதே.

- ச. வி. கிருபாகரன்

நன்றி: ஈழமுரசு

முற்றும்


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்