About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 7, 2012 / பகுதி: விளையாட்டு /

ரெஸ்ட் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்க அணி வென்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 580 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘பொலோ ஒன்’ செய்ய வேண்டி ஏற்பட்ட இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது.

எனினும் இலங்கை அணியால் இரண்டாவது இன்னிங்ஸிற்காக 342 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இந்நிலையில் இரண்டு இன்னிங்ஸிலும் தென்னாபிரிக்க அணியை விட இலங்கையால் 1 ஓட்டத்தையே அதிகமாக பெறமுடிந்தது. இதனால் 2 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கு தென்னாபிரிக்க அணிக்கு வழங்கப்பட்டது.

இதனால் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை மிக இலகுவாக பெற்றது. இதனால் 2 க்கு 1 என்ற அடிப்படையில் ரெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்