About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 21, 2011 / பகுதி: அறிக்கை /

தமிழீழ விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளராக பிரான்சிஸ் மாமா கெளரவிப்பு

ஊடக இல்லத்தின் தலைவர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,

சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்கள்.

புலம்பெயர்ந்த மண்ணில் தனது தமிழ்த் தேசிய பணியை தொடக்கிய  பிரான்சிஸ் அந்தோனி    சந்தியோகு, புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை கொண்டுசெல்லும் ஊடகப்பணியை செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது தேசியப்பணி ஊடாக செய்து வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது பணியை நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள்     மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் சாவு தேசியப் பணியில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களுக்கு ‘நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிக்கப்பட்டுவதில் நாம் பெருமை கொள்கின்றோம்.  அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.