About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 3, 2011 / பகுதி: அறிவியல் /

ஐ போன்கள் ஆபத்தானவையா?: திணறும் அப்பிள்

தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

 

அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.

 

எனினும் இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது.

 

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

 

 

இது குறித்துத் தெரிய வருவதாவது,

 

பிரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார்.

 

சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளது.

 

இதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது.

 

இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.

 

இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது.

 

 

 

 

எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை.

 

இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

 

 

இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

 

மேலும் இச் சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

 

இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.

 

இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

 

 

 

 

எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை.

 

பொறுத்திருந்து பார்ப்போம் அப்பிள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதனை!

 

 

 



எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.