Jan 28, 2009
/
பகுதி: தூய தமிழ்ச்சொற்கள்
/
அநர்த்தம், அநாதி, அநாதை, அநியாயம், அநீதி ஆகியவற்றுக்கான தூய தமிழ்ச் சொற்கள்
அநர்த்தம் - அழிவு, கேடு
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - நடுவின்மை, முறைகேடு
அநந்தம் - முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அந்தியம் - முடிவு, சாவு
அந்தியக்கிரியை - ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் - முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் - பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்
அதீதம் - மிகை
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை,