About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 9, 2010 / பகுதி: செய்தி /

துன்பத்தில் இருந்து விடுவித்து பரிவோடு பாதுகாப்போம்

முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள்.

உயிரிழப்பு
பொருளாதார இழப்பு
தொழில் இழப்பு
இடப்பெயர்வு
ஏதிலிகள்
வறுமை

நல்லதோர் வாழ்வு செய்வோம் நம்பிக்கை கொண்டெழு தமிழா

இன்றுள்ள தேவை
எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல்
சுயமாக வாழவைத்தல்

எமது உறவுகள் பொருளாதார மலர்ச்சி கண்டால்
சுதந்திரம் தேடிவரும்

தாயக உறவுகளுக்கான பொருள் சேகரிப்பு

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தமிழர் தாயக பகுதியில் இடம் பெற்ற போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட விளைவுகள் தாங்க முடியாது. உயிரிழப்பு உடமை இழப்பு இருப்பிட இழப்பு அத்துடன் அங்கவீனர்கள், விதவைகள் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள், என சமுக கட்டமைப்பக்கள் குலைந்த நிலையில் எமது சமுகம் பெரும் பாதிப்புக்குள் வாழ்கின்றது.

இந்த நிலையில் இருந்து எமது மக்களை மீட்டு அவர்களை சுயமாக வாழவைக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் அனைவருக்கும் உள்ளது. எனவே அனைவரும் ஒருமித்து எமது உறவுகளை பாதுகாப்போம், வாழவைப்போம்.

அன்பான பிரான்ஸ் வாழ் உறவுகளே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் முதற்கட்டமாக கல்வியை தொடர துடிக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும், சாதாரண மாணவர்களுக்கும் உதவுவதற்காக கல்வி உபகரணங்களை சேகரித்து இலங்கைக்கு அனுப்ப உள்ளது.

எனவே தரமான கணனிகள் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்றவற்றை செப்டெம்பர் பதின்மூன்றாம் திகதியில் இருந்து முப்பதாம் திகதி வரை உள்ள நாட்களில் வழங்கி எமது உறவுகளுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உடனடித்தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள்.

குடும்ப தலைவர்களை இழந்து வறுமையில் வாடும் குடும்பங்கள்.

பல தடவைகள் இடம் பெயர்ந்து துன்பங்களை அனுபவித்து முகாம்களில் வாழ்ந்து மீள சொந்த இடம் திரும்பிய குடும்பங்கள்.

கல்வி உதவிகளின்றி கல்வியை தொடரத்துடிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்.

போரினால் அவயவங்களை இழந்து செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்காக ஏங்கி காத்திருக்கும் உறவுகள்.

கைதிகளாக சிறையில் தமது வாழ்நாட்களை கழிக்கும் போராளிகளின் குடும்பங்கள்.

நிற்கதி அற்ற குடும்பத்தவர்களை நம்பிக்கை நிறைந்த மனிதர்காளாக வாழ
மனோ வலிமையையும் ஆத்ம பலத்தையும் கொடுத்து மனதை வருத்துகின்ற அழுத்துகின்ற பாரங்களை நீக்கி மகிழ்வோடு வாழ வைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டல்லவா? செந்நீர் சிந்திய மக்களின் விழி நீர் துடைத்து மார்கழிச் செழிப்பாய் வாழ்வு சிறக்க உதவிகள் பரிவோம்.

இமைக்கும் பொழுதில்! இவர்க்குதவி
ஈட்டும் புண்ணியம் அத்துயரில்
எமக்கும் நல்கும் உதவியென
எண்ணும் ஈர நெஞ்சத்தார்
சுமக்கும் துயரம் பயனாளர்
துறக்க உதவ அழைக்கின்றோம்.

உதவும் காலம் 13.09.2010 முதல் 30.09.2010 வரை

குறிப்பு:
2005 க்கு பின்னான கணணி தரமானது ஏற்றுக்கொள்ளப்படும்.
புதிதாகவும் வாங்கித்தரலாம்
கொம்பாஸ் பெட்டி
அப்பியாசக்கொப்பி
மற்றும் புதிய கல்வி உபகரணங்கள்

பொருட்கள் சேகரிப்பு மையம்
சிப்பி மண்டபம்

12 AVENU JULES FERRY

93140 BONDY

காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை வழங்கலாம்
மேலதிக விபரங்களுக்கு த.பு.க பணியகத்துடன் தொடர்புகொள்ளவும்


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......