About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 9, 2010 / பகுதி: செய்தி /

லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது சிறீலங்கா

லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி  பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய அதிகாரிகளுடன் சிறீலங்கா அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாங்கள் தெரிவித்தன.

புதுடில்லியிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இது தொடர்பான விபரமான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

புனே நகரிலுள்ள ஜேர்மன் பேக்கரியொன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட  29 வயதான மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவர்  தான் சிறீலங்கா, கொழும்பில் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் அந்த பயிற்சிமுகாம் எந்த இடத்தில் இருந்தது என்பது குறித்த விபரங்களை தற்போது பொலிஸார் பெய்க்கிடமிருந்து பெற்றுவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......