About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 9, 2010 / பகுதி: செய்தி /

நடுக்கடலில் பழுதானது குமுதினிப் படகு மரண அச்சத்தில் தவித்தனர் பயணிகள் - விரைந்து வந்த படகொன்று குமுதினியை இழுத்துச் சென்றது

குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி நேற்றுக் காலை 10.30 மணியளவில் புறப்பட்ட குமுதினிப் படகு நடுக்கடலில் பழுதானதால் பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரலிட்டனர். இச் சம்பவம் குறித்து உடனடி யாக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டு, அவசரப் பணிப்பின் பேரில் மற்றுமொரு படகுகொன்று சம்பவ இடத்துக்கு விரைந்து குமுதினிப் படகை இழுத்துச் சென்றது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றுக் காலை 10.30 மணி யளவில் குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்ட குமுதினிப் படகு நயினாதீவு எல்லையைக் கடந்து நடுக்கடலில் சென்ற போது திடீரெனப் பழுதானது. இதனையடுத்து படகு அலையின் தாக்கத்தினால் தள்ளாடியது. அதில் பயணித்த சுமார் 120 பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரல் இட்டனர்.

இது குறித்துப் படகிலிருந்து பயணி ஒருவர் நெடுந்தீவு அரச அதிபர் திருலிங்கநாதனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இந் நிலையில் நெடுந்தீவு கடற் றொழில் சமாசத்துக்குச் சொந்தமான படகு உடனடியாக அனுப்பப்பட்டுக் குமுதினிப் படகைக் கட்டி இழுத்துக் கொண்டு நெடுந்தீவுக்குப் புறப்பட்டது.

குமுதினிப் படகு பழுதாகிய நிலையில் சுமார் ஒரு மணிநேரம் கடலில் தள்ளாடியதாகவும் பயணி ஒருவர் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் பல தடவைகள் இடம் பெற்றபோதும் எந்தவொரு அதிகாரியின் கவனத்தையும் ஈர்க்கவில்லை என பயணிகள் பேசிக்கொண்டனர்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......