Sep 8, 2010
/
பகுதி: இந்திய செய்தி
/
தென்னிந்திய தமிழ் நடிகர் முரளி காலமானார்
பிர பல தென்னிந்திய தமிழ் நடிகர் முரளி தனது 47 வது அகைவையில் காலமானார். கே பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் (1984) இல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி.
நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு - அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதாக எமது தமிழகச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.