கடந்த வாரம் கிளிநொச்சி மக்களுக்கு என்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சாதாரண தகரங்களைக் கூட – ஸ்ரீலங்கா அரச அதிபரின் ஒப்புதலுடன் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பதிவுகள் யாவும் வடபகுதி மக்களுக்கு வழங்கப்பட்டதாகவே இருக்கின்றன.
இதேசமயம் புலம் பெயர் தமிழர்கள் எந்தெந்த நிறுவனங்களின் ஊடாக பணம் அனுப்புகின்றார்களோ அது அங்கே போய்ச்சேர்கின்றதா என்ற சந்தேகம் இருக்கின்றது எனவும் எமது செய்தியாளரிடம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.