ஸ்ரீலங்காவின் 18வது சட்டமூலம் கொழும்பில் பெரும் பரபரப்பினையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள் எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறுவதாகவும் ஸ்ரீலங்கா கலக தடுப்புப் படையினரும் - இராணுவம் மற்றுமு விசேட அதிரடிப்படையும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதே வேளை, சனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தமது கட்சி அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் என நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி 18 வது அரசியல் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அரசுக்கு ஆதரவாக ஓர் பேரணியை தொழிற்சங்க சம்மேளனம் முன்னெடுத்திருந்தது.
மற்றும் ஒரு பேரணி ராஜகிரிய ஆயுள் வேத சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி சென்றது. ஆதரவாக அம்பாறையிலும் பண்டாரவளையிலும் நாவலப்பிட்டியிலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன
இதனிடையே எதிராக ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ கோத்த கட்சி தலைமையகத்தில் இருந்து பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்தது. எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் தலைமையில் இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படடது. இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார்