Sep 8, 2010
/
பகுதி: செய்தி
/
அச்சக உரிமையாளர் குடும்பத்துடன் காணாமல் போயுள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சியின் சுவரொட்டிகளை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த நுகேகொடையில் உள்ள அச்சகம் ஒன்றின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டிருந்தன.