ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் 18வது அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் உள்ள இடதுசாரிகள் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளமையானது மறைமுகமாக சர்வதேச முதலாளிதுவ தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதாகும் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.