Sep 8, 2010
/
பகுதி: செய்தி
/
மாடி வீட்டில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை
கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தொடர் மாடி வீடு ஒன்றில் இருந்து கீழே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வரும் 62 வயதான செல்வரட்ணம் செல்வராணி என்பவரே தற்கொலை செய்துக்கொண்டரவாவார்
வெள்ளவத்தை 37 வது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனக்குள்ள நோய் உட்பட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே தாம் தற்கொலை செய்துக்கொண்டதாக குறித்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்