About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 8, 2010 / பகுதி: செய்தி /

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்.

2010 ஆண்டு ஜனவரி 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சில உள்ள10ர் மற்றும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் கூடி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் 8ம் திகதி வரை கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசின் ஆலோசனைக்கு அமைய தீரமானித்துள்ளனர்.

சென்ற ஆண்டு சிறீலங்கா அரசாங்கம் இந்திய அரசின் துணையுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை புரிந்ததையும், எண்ணில் அடங்காத மனித உரிமை மீறல்களை புரிந்ததற்காகவும், சர்வதேசசமூகம் தொடர்நதும் தம் கண்டனங்களை வெளிப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாது, சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சில காய்நகர்ததல்களையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதன் முதல் நகர்வாகவே சிறீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தனது ஏற்றுமதி வரிச்சலுகையை இழந்துள்ளது.

மனிதத்தை நேசிக்கும் பல நாடுகள், தலைவர்கள், மனித ஆர்வாலர்கள் வன்னியில்
இடம்பெற்ற போர்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என தொடர்நதும் அழுத்தம் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

போர்குற்ற விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டால் தாம் தண்டிக்கப்படுவோம் என அஞ்சும் மகிந்த அரசாங்கம், எப்பாடு பட்டாவது சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்கு தன்னாலான அனைத்து
நகர்வுகளையும் மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இந்திய திரைப்படவிழாவை கொழும்பில் ஜூன் மாதம் நடாத்தியது.

ஆனால் இதன் கபடத்தனத்தை அறிந்த தமிழ்ததிரையுலகம் அவ்விழாவை முற்றாக புறக்கணித்திருந்தார்கள், அத்தோடு இந்திய முன்னனி நடிகர்கள் அனைவரும் தமிழர்களுக்காக தாமும் அவ்விழாவை புறக்கணித்திருந்தார்கள்.

தன்மதுள்ள இரத்தக் கறையை மறைக்க முனைந்த மகிந்தா அரசு பெரும் தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்தது.

தாம் தமிழரின் எதிரி அல்ல எனும் ஓர் பிம்பத்தை காட்டவேண்டிய கட்டாயத்தில் மகிந்தா அரசு
இருப்பதனால், தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடாத்த அது முனைகிறது. தமிழர் நாம் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இரத்தத்தில் நந்திக்கடல் செந்நீரானதையும் முள்வேலிக்குள் எம்மக்கள் படும் துயரையும் நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.

இதற்கெல்லாம் காரணமான மகிந்தா அரசு தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு எம் மக்கள் விரும்பும் நிரந்தரத் தீரவு அவர்கட்கு வழங்கப்படவேண்டும்.

தமிழர்களுக்கு நீதி வழங்கும் வரை இலங்கைத் தீவில் சிங்கள அரசுக்கு சாதகமான அனைத்து
நடவடிக்கைகளையும் புறக்கணிக்குமாறு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரையும் உரிமையுடன் டென்மார்க் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு

சந்தோஷ் ம.

செயலாளர்


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......