அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இராணுவப் புரட்சியொன்றுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேவேளை இவ்விவாதத்தை ஐ.தே.க பகிஷ்கரிப்பது குறித்தும் சரத் பொன்சேகா அதிருப்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்.