ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் (வயது 13 ) இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார்.
இதனால் அங்கு சிறிய ஒரு கலவரமே மூண்டது. ஆலய சுற்றாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.
கேணிக்கு அருகில் கடமையிலிருந்த பெண் பொலிஸார் மீதும் இளைஞர்கள் தீர்த்த நீரை அள்ளி ஊற்றியிருக்கின்றார்கள்.
சுவாமி தீர்த்தமாடுகின்றமைக்கு முன்பாகவே தீர்த்தக் கேணிக்குள் குதித்து விட்ட இளைஞர்கள் ஆலயத்தை விட்டு பொலிஸார் வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.