About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 8, 2010 / பகுதி: செய்தி /

சீமான் பேசியதில் தவறில்லை: வைகோ

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் சீமானை சந்தித்து பேசினர்.

பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை.

அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை பொது மன்னிப்பு மூலம் விடுவிக்க வேண்டும். அதே போல், பரோலில் சென்று தாமதமாக சிறை திரும்பியவர்களுக்குப் பொதுமன்னிப்பு கிடையாது எனும் மனிதாபிமானமற்ற நிலையை அரசு கைவிட வேண்டும்.

சிறையில் இருப்பவர், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் பரோல் கிடையாது என்பதும் மனிதாபிமானமற்ற போக்கு. சீமானை அரசு விடுவிக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......