About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 7, 2010 / பகுதி: உலக வலம் /

ஆஸியில் அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றார் கில்லார்ட்

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஜூலியா கில்லார்ட்டுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 76 ஆசனங்களை அவர் பெற்றுள்ளார்.

150 அங்கத்தவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில்  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

தற்போதைய பிரதமர் ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சித் தலைமையிலான கூட்டணிக்கு 72  ஆசனங்களே இருந்தன. டொனி அபோட் தலைமையிலான லிபரல் - தேசிய கூட்டணிக்கு 73 ஆசனங்கள் கிடைத்தன. இதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு இரு தரப்பினரும் கடந்த 17 நாட்களாக பெரு முயற்சி நடத்தினர்.

ஜூலியா கில்லார்ட்டின் தொழிற்கட்சி நேற்றுவரை 74 அங்கத்தவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ரொப் ஒகேஷொட் மற்றும் டொனி வின்ஸர் ஆகிய சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் தொழிற்கட்சியைச் சார்ந்த பிரதமர் கெவின் ரூட், தனது கட்சியின் ஆதரவை இழந்து பதவி விலகியதன் பின், 48 வயதான ஜூலியா கில்லார்ட் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமர் இவராவார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......