Sep 6, 2010
/
பகுதி: இந்திய செய்தி
/
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- பீகார் முதலமைச்சர்
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 4 பொலிஸாரில் ஒருவர் கொல்லப்பட்டநிலையில் எஞ்சியுள்ள 3 பொலிஸாரை மீட்பது மற்றும் மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நேற்று கூட்டியிருந்தார்.
இதன்பின் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாவோயிஸ்டுகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் யார் என்பதை அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் பேச்சாளர் தெரிவிக்கையில், ‘3 பொலிஸாரும் தமது பாதுகாப்பில் உள்ளதாகவும் கடத்தப்பட்;ட பொலிஸார்களை மீட்பதற்கு மவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதலை நிறுத்திவிட்டு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்