ஆனால், அவர்கள் முறைக்கேட்டிலும் ஈடுபடவில்லை எனவும் பல்வேறு வணிக நிறுவனங்களுடனான விளம்பர ஒப்பந்தத்திற்காகவே இப்பணத்தைப் பெற்றதாகவும் அவ்வீரர்கள் தெரிவித்ததாக அவர்களின் சட்ட ஆலோசகர் டபாஸுல் ரிஸ்வி, பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மஸார் மஜீத் சூதாட்ட முகவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் மேற்படி வீரர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த விளம்பர ஒப்பந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காண்பித்ததாகவும் சட்டத்தரணி ரிஸ்வி தெரிவித்துள்ளார்.