About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 6, 2010 / பகுதி: விளையாட்டு /

தெண்டுல்கருக்கு விமானப்படையின் கௌரவ 'குரூப் கப்டன்' பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா டெல்லியில் உள்ள விமானப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி பி.வி.நாயக் கலந்து கொண்டு தெண்டுல்கருக்கு கௌரவ 'குரூப் கப்டன்' அந்தஸ்தை வழங்கினார்.

37 வயதான தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னனாகத் திகழ்கின்றார். ஏற்கனவே பத்மவிபூசன், பத்மஸ்ரீ, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, விஸ்டன் கிரிக்கெட் விருது, அர்ஜுனா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு தற்போது வழங்கப்பட்ட கௌரவம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

விமானத்துறையின் எந்தப் பின்னணியும் இல்லாமல், விளையாட்டு வீரர் ஒருவருக்கு விமானப்படையில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவ பதவி இதுவாகும். அத்துடன் அவர் விரைவில் போர் விமானத்திலும் பறக்க இருக்கிறார்.

கௌரவ 'குரூப் கப்டன்' அந்தஸ்தைப் பெற்ற தெண்டுல்கர் பேசுகையில்,

"இந்திய விமானப்படை எனக்கு அளித்த இந்த கௌரவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப்படையில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது. இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கனவு காணுங்கள். கனவு ஒருநாள் மெய்ப்படும்" என்றார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......