நியூசிலாந்தில், சாகசப் பயிற்சி அளிக்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். நியூசிலாந்தின் சவுத் ஐலண்ட் பகுதி சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கக்கூடியது.
மலையேறுதல், நீர்ப்பயணம் போன்றவற்றை ரசித்து அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இங்குள்ள பாக்ஸ் கிளேசியர் என்ற இடத்தில் விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்யும் நால்வர், சுற்றுலாப் பயணிகள், விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்வதற்காக வீரர்கள் நான்கு பேர் மற்றும் விமானி ஆகியோருடன் விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் வெடித்துச் சிதறி தரையில் மோதி தீப்பற்றியது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாயினர். இறந்தவர்களில் பிரித்தானியா, அவுஸ்ரேலியா, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா 4 பயணிகளும் அடங்குவர்.
ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழு, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.