நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 295-வது பிறந்த நாள் விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ், சசிகலாவின் கணவர் எம். நடராஜன் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இவ் விழாவில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், இரண்டு இலட்சம் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக் கமற்றுக் கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ஈழத்தில் நாங்கள் போராடவில்லை.
போராட்டம் எங்களுக்குத் திணிக்கப்பட்டது. அதனால் தான் நாங்கள் போராடுகின்றோம். வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித் தேவன் பாய்ந்தார். அதேபோல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்துப் பாய்ந்தார். சிங்களவரினின் கொடுமை எத்தனை? எத்தனை? என்றார்.