முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் அரச படையினர் வான்படை முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே தரைப் படையினரும் இங்கு நிலைகொண்டுள்ளார்கள். இப்பகுதிகளில் இருந்து கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இச்சூழ்நிலையில் மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் படைத் தரப்பினர் இவர்களை விசுவமடு, கல்லாறு, மயில்வாகனபுரம் போன்ற பகுதிகளில் குடியமர்த்த முயற்சிக்கின்றனர். ஆயினும் இம்மக்கள் இம்மாற்று ஏற்பாட்டுக்கு இணங்கவில்லை.