பகுதி | தூய தமிழ்ச்சொற்கள்

சங்கீதம், இராகம், உச்சரிப்பு, குசினி, ஐஸ்கிறீம், சர்வதேசம் ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

சங்கீதம், இராகம், உச்சரிப்பு, குசினி, ஐஸ்கிறீம், சர்வதேசம் ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

வெகுமானம், வைத்தியம், விரக்தி, வீதி, ரௌடி ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

வெகுமானம் - அன்பளிப்பு
வைத்தியம் - மருத்துவம்
விரக்தி – மனமுறிவு
வீதி – தெரு, மறுகு
ரௌடி – முறையிலி, ஒழுங்கிலி


நகல், தேகம், துரோகம், தொப்பி, நிமிசம் ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படையினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும் என



கஸ்டம், கப்பம், கேலி, நகல், தூசணம் ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

கஸ்டம் - துன்பம், கடுமை
கப்பம் - வன்பறி
கேலி – பகிடி, ஏகடியம், எள்ளல்
நகல் - படி
தூசணம் - இழிமொழி, வசை


அதிஸ்டம், அபாயம், ஆதாரம், ஆபரணம், இலகு ஆகியவற்றுக்கான தூயதமிழ்ச் சொற்கள்

அதிஸ்டம் - நல்வாய்ப்பு, நல்லூழ், ஆகூழ்
அபாயம் - பேரிடர்
ஆதாரம் - சான்று, பற்றுக்கோடு, நிலைக்களன், அடிப்படை
ஆபரணம் - அணிகலன்
இலகு – எளிது, எளிமை


ஐக்கியம், ஒளடதம், கங்கணம், கட்சி, ஏலம் ஆகியவற்றுக்கான தூய தமிழ்ச் சொற்கள்

ஐக்கியம் - ஒற்றுமை, ஒருமைப்படல்
ஒளடதம் - மருத்து
கங்கணம் - உறுதி (பூணல்)
கட்சி – அணி
ஏலம் - கூறுகை, கூறல்


அநர்த்தம், அநாதி, அநாதை, அநியாயம், அநீதி ஆகியவற்றுக்கான தூய தமிழ்ச் சொற்கள்

அநர்த்தம் - அழிவு, கேடு
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - நடுவின்மை, முறைகேடு