வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

”தமிழீழம் வாழ்கிறது போராட்டம் தொடர்கிறது” ஒரு பூர்வ குடியினரின் கோசம்

lathin-america-05
மத்திய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நடனம்

2016 மே மாதத்தில், சில ஈழத்தமிழர்கள்;, சில சிங்களவர்கள், மற்றும் உலகில் பரந்து வாழும் சில சமூக-அரசியல் ஆர்வலர்கள் கொண்ட குழுவொன்று இகுவடோர் நாட்டிற்குச் சென்றிருந்தது. அந்நாட்டிலுள்ள பல பூர்வகுடி மக்களின் அமைப்பொன்று இவர்களை அழைத்திருந்தது. அங்கு சென்ற குழுவிலிருந்த சிலர் “சிறீலங்கா பற்றிய நிரந்தர மக்கள் தீர்பாயத்தை” நடத்திய குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இதற்கு முன்னரும் சில தடவைகள் இகுவடோர் நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அங்கு இப்பூர்வகுடி மக்களின் அமைப்புடன் நட்பை வளர்த்திருந்தார்கள். தமிழ் இனவழிப்பைப் பற்றி அறிந்து கொண்ட அப்பூர்வகுடி அமைப்பு, முள்ளிவாய்கால் தினத்தை ஒரு குழுவாக தம்முடன் சேர்ந்து நினைவு கூரும்படி அழைப்பு விட்டிருந்தார்கள். இதுவே மேற்சொன்ன குழு இகுவடோர் செல்வதற்கான பின்னணி.

lathin-america-01
நாடாளுமன்றத்தில் அமொிக்காவின் கொடுமைகள் சித்தரிக்கும் காட்சிகள்

இகுவடோர் சென்ற இக்குழுவினரின் அனுபவங்களை புரிந்துகொள்ள, லத்தீன் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். 500 ஆண்டுகளுக்கு முன்னர் லத்தீன் அமெரிக்கா ஸ்பெயின் நாட்டினரால் காலனியாக்கம் செய்யப்பட்டது. லத்தீன் அமெரிக்காவின் வளங்களை கொள்ளை செய்வதற்காக, ஸ்பெயின் இங்குள்ள பல பூர்வகுடிகளை இனவழிப்பு செய்தது. இப்பூர்வகுடி மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை நினைவில் வைத்திருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா ஸெபெயின் நாட்டின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பின்னர், அமெரிக்க அங்கு தலையிட்டு, தனது நாட்டு நிறுவனங்கள் அங்குள்ள வளங்களைச் சூறையாட வழி செய்தது. இதுபற்றி மேலும் அறிவதற்கு இணையத்தில் “USA operations in Latin America” என்று தேடிப்பாருங்கள்.

lathin-america-02 1
மத்திய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மே 18

இகுவடோரில் எமது குழுவின் முதல் நிகழ்வாக முள்ளிவாய்கால் தினத்தை நினைவுகூருவது இருந்தது. எமக்கு அழைப்பு விடுத்திருந்த பூர்வகுடி அமைப்பு இதையும் இதற்கு அடுத்த நாள் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளையும் விளம்பரப் படுத்துவதற்கு ஒரு அழகான துண்டறிக்கையை தயாரித்திருந்தார்கள். இம்மூன்று நிகழ்வுகளும் இகுவடோரின் தலைநகரமான குவிட்டோரில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

lathin-america-02
ஒட்டவாலோ தேவாலயத்தில் புனிதர்கள்

முதல் நிகழ்வு நாளான மே 18 இல், அங்கு இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் இந்நிகழ்வு இடம்பெற இருந்த சைமன் பொலிவார் பலகலைக்கழகம் எல்லா பொது நிகழ்வுகளையும் இரத்து செய்தது. இத் தடையையும் மீறி எம்மை அழைத்த பூர்வகுடிகளின் அமைப்பு முள்ளிவாய்கால் நிகழ்வை நடத்த வேண்டும் என்று தீர்மானமாக எடுத்த முயற்சிகள் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இறுதியில் நிகழ்வு பூர்வகுடிகள் அமைப்பின் கட்டிடத்திலேயே இடம்பெற்றது. கடைசி நேர இடம் மாற்றத்தின் பின்னரும் அதற்கு 70 பேர்கள் வந்திருந்தார்கள். இவர்களில் அதிகமானோர் பூர்வகுடி அமைப்புக்களின் முக்கிய புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

lathin-america-03 1
மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு

முள்ளிவாய்கால் நிகழ்வு மௌன அஞ்சலியுடனும் மெழுகுவர்த்தி அஞ்சலியுடனும் ஆரம்பித்தது. தொடர்ந்து முள்ளிவாய்கால் இனவழிப்பிலிருந்து தப்பிய ஒருவர் தமிழீழ நடைமுறை அரசுபற்றியும் இனவழிப்பின் அனுபவங்கள் பற்றியும் பேசினார். வேறொருவர் தமிழினவழிப்பின் பூகோள அரசியல் பரிமாணம் பற்றிப் பேசினார். ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையை எவ்வாறு அமெரிக்க அரசு திட்டமிட்டு அழித்தது என்பதை இவர் விளக்கினார். கனடாவிலிருந்து எழுவர் கொண்ட ஒரு தமிழ் நடனக்குழுவும் அதன் நலன் விரும்பிகளும் எமது குழுவுடன் இணைந்திருந்தனர். அங்கிருந்த சிறு அரங்கம் நடனங்களுக்கு இசைவாக மாற்றியமைக்கப்பட்டு தமிழ் நடனக்குழுவும் பூர்வகுடிகளின் நடனக் குழுவும் பல நடனங்களை மேடையேற்றினர்.

lathin-america-03
ஒட்டவாலோ தேவாலயத்தில் புனிதர்கள்

எமது குழுவிலிருந்த, லத்தீன் அமெரிக்காவுக்கு புதியவர்கள், இம்மக்கள் காட்டிய கூட்டு-ஒருமையையும் அக்கறையையும் கண்டு வியப்புற்றார்கள். இப்பூர்வகுடி மக்கள் மனிதநேயம் மிக்க வேறொரு உலகத்திலிருந்து வந்தவர்கள் போலத் தோன்றினார்கள். ஆங்கில மொழி பேசும் உலகிலேயே மூழ்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் வேறு மக்களின் கூட்டு-ஒருமையை நேரடியாக அனுபவித்தில்லை. மாறாக ஆங்கில மொழி பேசும் உலகம் இவர்கள் போராட்டத்தை கேவலமாக விமர்சிப்பது மட்டுமே இவர்கள் ஏனைய மக்களிடம் பெற்ற அனுபவமாக உள்ளது. பெரும்பான்மையான தெற்காசிய மக்களும், ஈழத்தமிழரும் கூட இந்த ஆங்கிலம் மொழி பேசும் புதிய-தாராளவாத இராணுவ மயமாக்கப்பட்ட சூழலில் அமிழ்ந்து போயிருக்கிறார்கள். இதனால் இவர்களில் பெரும்பான்மையோரும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு கூட்டு-ஓருமையை காட்ட தவறிவிட்டார்கள். பல தசாப்தங்களாக ஆங்கில மொழி பேசும் உலகத்திடமிருந்து உள்ளழுந்த அடிவாங்கிய ஈழத்தமிழருக்கு குவிட்டோரில் அன்றும் தொடர்ந்த பத்து நாட்களும் அனுபவித்த கூட்டு-ஒருமை மனதை ஆழமாகத் தொட்டது.

lathin-america-04 1
மத்திய பல்கலைக்கழத்தில் மே 19-இல் ஒன்றுகூடிய மாணவர்கள்

அடுத்த நாளின் இரு நிகழ்வுகளும் மத்திய பல்கலைக்கழகத்தில் இரு வேறு மாணவர் தொகுதியினருக்காக இடம் பெற்றது. இரு நிகழ்வுகளும் அங்கு குழுமியிருந்த மாணவர்களின் துறை முதல்வரின் பேச்சோடு ஆரம்பித்தது. எமது குழுவினர் இரு முதல்வர்களின் பேச்சில் தொனித்த தீவிரத்தையும் போராட்ட குணத்தையும் கண்டு வியப்புற்றனர். மேற்குலகத்திலும் சரி தெற்காசிவிலும் சரி பல்கலைக்கழகத் துறை முதல்வர்கள் இவ்வாறு பேசுவார்கள் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எம்மவருக்கு என்னதான் நடந்திருக்கிறது?

lathin-america-04
ஒட்டவாலோ தேவாலயத்தில் புனிதர்கள்

துறை முதல்வர்களின் பேச்சைத் தொடர்ந்து, முள்ளிவாய்கால் இனவழிப்பிலிருந்து பிழைத்து வந்த ஒருவரின் பேச்சு இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும் தமிழ் நடனக் குழுவினதும் பூர்வகுடி மக்களினதும் பல நடனங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து “பாதுகாப்பு வலயம்” (No Fire Zone) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. இங்கும் மாணவர்கள் ஈழத்தமிழருக்கு நடந்ததை இலகுவாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. லத்தீன் அமெரிக்க மக்கள் பூகோள அரசியல் விடயங்களையும் அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற தலையீடுகளையும் இலகுவாக புரிந்து கொள்கிறார்கள். ஆங்கில மொழி பேசும் உலகில் இது புரியப்படுவதுமில்லை ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதே. பெரும்பான்மை இந்தியர்களும் ஈழத்தமிழரும் இதை புரிந்துகொள்ள இன்றுவரை தவறிவிட்டார்கள் என்பதுவே ஆச்சரியமானது. ஆனால் லத்தீன் அமெரிக்க மக்களுக்கு புரிகிறது. இரு நிகழ்வுகளின் முடிவிலும் பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவர், “தமிழீழம் வாழ்கிறது. போராட்டம் தொடர்கிறது” என்ற கோசத்தை எழுப்பினார். பார்வையாளர்களாக இருந்த மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

இகுவடோர் நாடாளுமன்றத்திற்குப் போயிருந்தோம். அங்கிருந்த சட்டமன்றக் கூடத்தில் ஒரு உயர்ந்த சுவர் முழுவதும், இகுவடோரின் புகழ்பெற்ற ஒரு ஓவியர் படங்கள் தீட்டியிருந்தார். இதில் அமெரிக்காவுக்கு எதிரான பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. இது இத்ததைகய ஒரு பொது இடத்தில் இருப்பது ஆச்சரியம் தான்.

lathin-america-01 1
பூர்வ குடியினரைச் சேர்ந்த ஒருவர் தங்களது மரபு நிலத்தை காட்டுகிறார்

குவிட்டோரிலிருந்து மூன்று மணித்தியால வாகன ஓட்ட தூரத்திலிருக்கும் ஒட்டவாலோ என்ற நகரத்திற்குப் போயிருந்தோம். இங்குள்ள ஒரு பூர்வகுடி மக்களின் தேவாலயத்தில், லியோனிடாஸ் புரவான என்னும் கத்தோலிக்க விடுதலை இறையியல் பாதரின் சமாதி உள்ளது. இங்கு மக்கள் இவரை மிகவும் போற்றுகிறார்கள். நாங்கள் போனபோது இந்த தேவாலயத்தின் முன் ஏறத்தாள 200 பூர்வகுடி மக்கள் எம்மை வரவேற்க காத்திருந்தார்கள். தேவாலயம் மிகவும் எளிமையானது. சுவரின் உயரத்தில் இம்மக்களின் பல விடுதலை வீரர்களின் படங்கள் கண்ணாடியில் அமைக்கப்பட்டிருந்தன. இவ்விடுதலை வீரர்களில் பெண்களும் இருந்தார்கள். சிலர் ஆயுதம் தரித்தவர்கள். மற்றவர்கள் தலைவர்களாக இருந்தவர்கள். ரோம் நகர கத்தோலிக்க திருச்சபை இவர்களை புனிதர்களாக ஏற்காவிடினும் இம்மக்கள் இவர்களை புனிதர்களாக கொண்டாடுகிறார்கள். அங்கிருந்த வாங்குகளில் நாம் சுற்றியிருந்தோம்.

அஞ்சலியும் மெழுகுவர்த்தி ஒளியேற்றலும் இடம்பெற்றது. துணைவர் இருவர் எம்மை வரவேற்க ஒரு சடங்கை நடத்தினார்கள். ஆண் கூடத்தின் நடுவிலிருந்து குரலிசை எழுப்ப பெண் ஒரு தணல் சட்டியுடன் உள்ளே வந்து முள்ளிவாய்கால் இனவழிப்பிலிருந்து பிழைத்து வந்தவருக்கு ஒரு சிவப்பு ரோஜாவை கையளித்தார்.

தொடர்ந்து அருட்தந்தை பிரான்சுவா ஹ{டாட் திருப்பலி நிகழ்த்தினார். இவர் அருட்தந்தை மட்டுமல்ல, உலகப்புகழ்பெற்ற ஒரு கல்விமான், ஏராளமான நூல்களை எழுதியவர், சமூகமட்டத்தில் இன்னும் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டவர். ஆசிய மக்களும் லத்தீன் அமெரிக்க மக்களும் கூட்டு-ஒருமையுடன் போராட வேண்டியதை அவர் வலியுறுத்தினார். இதற்கு முன்னரே எமது குழுவுக்கு இவர் தனது நூலான ‘ஊழஅஅழn புழழன ழக ர்ரஅயnவைல’” என்பதைப் பற்றிப் பேசியிருந்தார் இந்நூலும் இணையத்தில்  ஆக கிடைக்கிறது.

அடுத்த நாள் குவிட்டோருக்கு நாங்கள் திரும்பும் போது, வழியில் ஒட்டவாலோ சந்தைக்குப் போனோம். நிறங்கள் தெளித்து விட்டது போலிருந்தது அச்சந்தை. அல்பெக்கா எனப்படும் ஒரு மிருகத்தின் கம்பளியால் பின்னப்பட்ட உடைவகைகளும், பைகளும் படங்களும் எல்லாம் வர்ண ஜாலமாய் இருந்தது.

குவிட்டோர் நகரத்திற்கு சுற்றுலா பயணிகளாகப் போகிறவர்களுக்கு அங்குள்ளவர்கள் கட்டாயம் “பழைய நகரத்தை பாருங்கள்” என்று சொல்வார்கள். இப்பழைய நகரம் காலனிய காலத்தை பிரதிபலிக்கும் ஒரு மிகப்பரந்த இடம். கற்கள் பதித்த வீதிகளும், பரந்த பூங்க போன்ற இடங்களும், வியப்பூட்டும் பல பிரமாண்டமான தேவலயங்களுமாக இப்பழைய நகரம் இருக்கிறது. தமிழர்கள் தான் பெரிய கோவில்கள் கட்டுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஸ்பெயின் நாட்டவர்கள் இவ்விடயத்தில் தமிழர்களை சந்தேகமின்றி தோற்கடித்து விட்டார்கள். இப்பழைய நகரம் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதால், அங்கு செல்லும் கார்களையும் பஸ்களையும் அகற்றி விட்டால் அக்காலத்திய சினிமாப் படமொன்றிற்கான சிறந்த இடமாக இருக்கும் என்று எம்முடன் இருந்த ஒரு நண்பர் சொன்னார்.

இக்கட்டுரையை முடிக்கும் முன்னர் இன்னுமொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். நியுசிலாந்திலிருந்து குவிட்டோருக்குப் போகும் வழியில் சிலி நாட்டின் சந்தியாகோ நகரில் பிரயாணத்தை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் முறித்தேன். ஒரு நண்பர் என்னை இங்கு சிறப்பாக கவனித்துக் கொண்டார். இந்த நண்பரும் அந்நாட்டின் ஒரு இருண்ட காலமாமான பினோசே என்ற சர்வாதிகரியின் காலத்தில், ஆர்வலராக செயற்பட்டு, தன் உயிருக்குப் பயந்து வாழ்ந்தார். இவரின் சகோதரி ஒரு பாதாளச்சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இவரின் வீட்டு முன்கூடத்தில் சல்வடோர் அலண்டேயின் படம் முதலிடம் பெற்றிருந்தது. இவரின் முன்கூடத்திலிருந்த நூல்களைப் பார்த்த போது சிலி நாட்டு மக்கள் சர்வாதிகாரி பினசோ காலத்தில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைவுகூர ஏராளமான நினைவுச் சின்னங்களை நாடு முழுவதும் நிறுவியிருக்கிறார்கள் என்று தெரிந்தது. சந்தியாகோ நகருக்கு அண்மையில் ஒரு மனித உரிமைகள் அருங்காட்சி நிலையமும் சிலி அரசு அமைத்திருக்கிறது. இங்கும் பினசோ காலத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் சின்னங்கள் அதிகம் இருக்கின்றன. சிலி நாட்டு நண்பர் என்னை இங்கு அழைத்துச் சென்றார். நாங்கள் போனபோது பல இளையோர் அங்கு வந்து பார்வையிடுவதை காணக்கூடியதாக இருந்தது.

இப்பணயத்தில் மிகவும் கவலை தந்த ஒரு விடயம் எங்களிள் குழுவில் பலருக்கு ஸ்பனி~; மொழி தெரியாமல் இருந்ததுதான்.
பின் குறிப்பு: லத்தீன் அமெரிக்கா செய்திகளைப் படிப்பதற்று ஒரு சிறந்த இணையத் தளமாக இத்தளம் இருக்கிறது:

http://www.telesurtv.net/english/section/news/index.html

இவர்கள் ஒரு யூரியூப் சனலும் வைத்திருக்கிறார்கள். இதில் “Empire Files” எனப்படும் தொடர் மிகவும் சிறப்பு.:
https://www.youtube.com/channel/UCmuTmpLY35O3csvhyA6vrkg

முகப்பு
Selva Zug 2