புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

தமிழ்த்தேசிய திரைப்படக் கலைஞர்கள் சங்கம்! தமிழீழக் கலைஞர்களுக்கு அழைப்பு

கடந்த 4.3.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் உருவானது. அதில் சங்கத்தின் தலைவராக மு. களஞ்சியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் தொடக்க விழாவில், மாற்று திரைக்கள ஆய்வு முறைகள், எதிர்கால செயல் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன.
Tamil Thesiya Thiraipada sangam 01
அதனைத் தொடர்ந்து 11.3.2018 அன்று நடந்த தமிழ்த்தேசியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் அறிமுகக் கூட்டம் – கலந்தாய்வுக்கூட்டத்தில் முக்கிய விடயமாக, புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ்க் கலைஞர்கள், தமிழீழக் கலைஞர்கள் யாவரும் தமிழ்த்தேசியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இக்கூட்டத்தில் ஈழத்தைச் சேர்ந்த திரைக் கலைஞர்களும் பங்கேற்றனர்.  அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து  சங்க நிர்வாகிகள் பேசும் போது “ புலம்பெயர் தேசத்தில் வாழும் கலைஞர்கள் எவ்வாறு சங்கத்தில் இணைவது, அந்தந்த புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் எப்படி செயலாற்றுவது, தமிழ்த்தேசியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் கிளையாக வெளிநாடுகளில் செயல்படலாமா?” உள்ளிட்ட பல விடயங்கள் இந்நிகழ்வில் ஆலோசிக்கப்பட்டது.Tamil Thesiya Thiraipada sangam 02
தமிழ்நாட்டில் வாழும் தமிழ்க்கலைஞர்களுக்காக ஒரு புதிய சங்கம் உருவாகியிருக்கும் அதே சூழலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் கலைஞர்களையும் – தமிழீழக் கலைஞர்களையும் இச்சங்கத்தில் இணைத்து செயல்பட முடிவெடுத்திருப்பதென்பது வரவேற்கத்தக்கது.
Tamil Thesiya Thiraipada sangam 03 Tamil Thesiya Thiraipada sangam 04 Tamil Thesiya Thiraipada sangam 05 Tamil Thesiya Thiraipada sangam 06 Tamil Thesiya Thiraipada sangam 07 Tamil Thesiya Thiraipada sangam 08

முகப்பு
Selva Zug 2