புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

சீற்றத்தின் உச்சம்:இறுதிக்கிரியைகளும் நடந்தது?

samவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அரசின் மீதான சீற்றம் கூட்டமைப்பு தலைமை மீது திசைதிரும்பி வருகின்ற நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிராக ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
தனிப்பட்ட கோபதாபத்தின் அடிப்படையில் எம்.சு.சுமந்திரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை நலிவுறச்செய்வதாக குற்றச்சாட்டுக்கள் குடும்பங்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு கட்சி தலைவரான இரா.சம்பந்தனும் முண்டு கொடுத்துவருவதாக தெரிவித்திருப்பதுடன் தமது போராட்டத்தை சிவசக்தி ஆனந்தனின் தூண்டுதலில் நடக்கின்ற போராட்டமாக காண்பிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முன்னதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப அங்கத்தவர்களிற்கும் அரச உயர்மட்டத்திற்குமிடையே நடைபெற்ற சந்திப்பின் போது சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தமது தரப்பின் சார்பில் பேச்சுக்களில் கலந்துகொள்வதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப அங்கத்தவர்கள் நிராகரித்திருந்தனர்.அத்துடன் சுமந்திரன் பங்கெடுத்தால் பேச்சிற்கு வரப்போவதில்லையென்ற அவர்களது அறிவிப்பையடுத்து சுமந்திரன் வெளியேற்றப்பட்டிருந்தார்.

sam2இதன் தொடர்ச்சியாக சுமந்திரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பில் பழிவாங்கும் வகையில் செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையிலேயே தமது விரக்தியின் ஒரு அங்கமாக சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரது உருவப்படங்களிற்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2