புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.

ஐ.தே.கவின் கொள்கையின் பிரகாரம், வெளியுறவு கொள்கை அமையும் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகளை அனுசரித்துச் செல்வதும், இந்தியாவின் உதவியை பெறுவதும் பிரதான நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சீனா இலங்கையில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் நடவடிக்கைகளை தொடருவது எனவும் ஆனாலும் கடந்த காலங்களை விட சீன ஆதிக்கம் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தாது எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை புதிய அமைச்சரவைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் உதவிகள் குறித்து இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தும் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான அழுத்தங்களை கையாள உயர்மட்டக் குழு ஒன்றை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்த வாரம் ஜெனீவாவுக்குச் செல்லவுள்ள அந்த உயர்மட்டக்குழு, காணமல் ஆக்கக்பட்டவர்கள் தொடர்பான விசாரணை, மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முகப்பு
Selva Zug 2