புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளைஞனின் உடலம் மீட்பு

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.image_4587a63191

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச்சேர்ந்த ப.டனுசன் (வயது 25) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஆட்டோ உரிமையாளரான குறித்த இளைஞரின் ஆட்டோவை, வாடகைக்கு அமர்த்திய சிலரை ஏற்றிக் கொண்டு நேற்று (21) மாலை சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (22) இளைஞரின் சடலம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்பு
Selva Zug 2