புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

குண்டு வெடிப்பு பின்னணியில் கோத்தா?

bus1தென்னிலங்கை குண்டுவெடிப்பிற்கு மஹிந்த ஆதரவு படையினரே காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் வழிநடத்தலில் செயற்படும் அணியினரே பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி சென்ற பேரூந்தில் குண்டினை வெடிக்க வைத்ததாக சொல்லப்படுகின்றது.தியத்தலாவ பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வரையானவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு பற்றி அரச உயர்மட்டத்திற்கு புலனாய்வு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் படி அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவத்தின் ஒரு பகுதியினர் செய்த நாசகார வேலையாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஆட்சிமாற்றம் சாத்தியப்படாத நிலையில், மஹிந்த அணிக்கு ஆதரவான இராணுவத்தரப்பினர் இந்த நாசகார சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இப்படியான நாசகார செயல்கள் குறித்து இலங்கைக்கு நெருக்கமாக உள்ள இரண்டு நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் முன்னதாகவே, அரச உயர்மட்டத்திற்கு எச்சரிக்கை அனுப்பியிருந்ததாகவும் தெரியவருகிறது.

முகப்பு
Selva Zug 2