புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

10 ஆவது முறையாகவும் ஸ்ரீ ல.சு.கட்சியை மைத்திரி தாரைவார்த்துள்ளார்!

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 ஆவது முறையாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தாரைவார்த்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

பொது வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததன் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முதலாவது முறையாக தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, ஸ்ரீ ல.சு.க.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்றல், பெரும்பான்மைப் பலம் இருந்தும் உள்ளுராட்சி சபைகளை கலைத்தல், ஸ்ரீ ல.சு.கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஐ.தே.க.யின் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கியமை, பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அறிவிக்காமை, ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்களை உடைத்து எடுத்து ஐ.தே.கட்சியுடன் கூட்டணி சேர்ந்தமை, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதாக மக்களை ஏமாற்றியமை மற்றும் மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை கொண்டு செல்ல தீர்மானித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியமை போன்ற நடவடிக்கைகள் மூலமும் ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.கட்சியைத் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாரைவார்த்துள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்

முகப்பு
Selva Zug 2