வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

தனித்து அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐ.தே.க! கூட்டமைப்பு ஆதரவு வழங்கலாம்?

Ranil-Sampanthanஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்து.

ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவும்  அரசியல் வட்டங்களின் மூலம் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்குமாயின் அமைச்சுப் பதவிகள் 30 வரையும், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இதுவரையில் தனியான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்​லையெனவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இன்றும் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2