வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது அமைச்சரவை!

ஸ்ரீலங்காவில் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்தது. எனினும் இன்று மகா சிவராத்திரி தினம் என்பதால் நாளைய தினத்திற்கு அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைகள் பலவற்றை கைப்பற்றி அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலைக்கு மத்தியில் நாளை கூடுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகப்பு
Selva Zug 2