வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்புச் சம்பவம்;சில வீடுகளுக்கு சேதம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக் கூலத்திற்கு பிரதேச நபர் ஒருவர் தீ வைத்திருக்கின்றார்.

இதன்போது குப்பைக் கூலத்திற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததினால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருட்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.

இதன் காரணமாக சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருள் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு அப்பணிகளில் இந்த வெடிபொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2