வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்.

66 வயதான அவர் சட்டத்தரணியாகவும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட 3 நிபுர்ணர் குழுவில் அங்கம் வகித்திருந்தார்.

பாகிஸ்தானிய ஊடகங்களின் தகவல்படி, மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்ததாக அறியமுடிகிறது

முகப்பு
Selva Zug 2