வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

ரஷ்யாவில் விமான விபத்தில் 71 பேர் பலி!

ரஷ்யாவில், பயணியர் விமானம் விபத்துக்குள்ளானதில், 71 பேர் பலியாயினர். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் இருந்து, 1,500 கி.மீ., தொலைவில் உள்ள, ஆர்ஸ்க் நகரத்துக்கு, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமே விபத்துக்குள்ளாகியது.
russian-plane-crash
தொடர்பு துண்டிப்புவிமானத்தில், 65 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் உட்பட, 71 பேர் பயணம் செய்தனர். மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில், விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. புறநகர் பகுதியான ராமென்ஸ்கைக்கு மேலே பறந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் பயணம் செய்த, 71 பேரும், உடல் சிதறி பலியானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவின், டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து, 40 கி.மீ., தொலைவில், பனி சூழ்ந்த பகுதியில், விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் தீ பிடித்தபடி பறந்து, தரையில் விழுவதை பார்த்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த பகுதிக்கு, வாகனங்கள் செல்ல முடியாததால், மீட்பு படையினர் நடந்து சென்றனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்து குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முகப்பு
Selva Zug 2