வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

தமிழ்படுகொலைகளை திட்டமிட்டு மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியினருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு சேர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆதரவு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச சபைக்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மகளிர் வேட்பாளரான நாகராசா பத்மராகினியின் பிரச்சார அலுவலகம் ஆயித்தியமலை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தினைத் திறந்து வைத்ததுடன், அரசியல் கருத்துக்களையும் வெளியிட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர் தமிழ் மக்கள் தேசிய கட்சிகளுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் முஸ்லிம் பிரதிநிதிகளை தேர்ந்தேடுப்பதற்க்கான வாக்குகள் மட்டுமன்றி வவுணதீவு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2