வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

வேசம் கட்டி உள்ளுராட்சி தேர்தலிற்கு வரும் டக்ளஸ்!

douglas-and-basil.jpgகடந்தகால அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தோற்றுப் போனமைக்கும் நிறைவேறாது போனமைக்கும் குறித்த அரசியல் தலைமைகள் முன்வைத்த கோரிக்கைகள் நம்பிக்கையுடனோ அன்றி விசுவாசத்துடனோ செயற்படாமையே பிரதான காரணம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நான் ஏனைய சக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதென்பது ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக அல்ல. அவர்கள் வரலாற்றில் விட்ட தவறுகளையும் பிழைகளையுமே பகிரங்கமாக சுட்டிக்காட்டி வருகின்றேன். எமது நிலைப்பாடு என்பது எப்போதுமே நியாயத்தினதும் உண்மையினதும் அடிப்படையிலுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசியவாதமும் தீவிரவாதமும் பேசிக்கொள்ளும் போலித் தமிழ் அரசியல் வாதிகளின் மத்தியில் புதிதாக முளைத்த பல்வேறு கட்சிகளும் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிடத் தயாராகி வருகின்றன.

ஆயினும் உள்ளுராட்சி சபைகளை வெற்றிகொள்ளும் பட்சத்தில் நிச்சயம் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவோமெனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
douglas-devananda-leader-epdp.jpg
1998ம் ஆண்டில் யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் சந்திரிகா அரசினால் நடத்தப்பட்ட தேர்தலில் ஏனைய கட்சிகள் போட்டியிடாது பின்வாங்கியதையடுத்து ஈபிடிபி பிரதேச சபைகள் அனைத்தையும் வென்றிருந்தது.
எனினும் அவை அனைத்தும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளிற்குள்ளாகியிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2