வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

தூதரக அதிகாரிகளின் வங்கி பரிவர்த்தனைகள் லீக்: அமெரிக்கா மீது குற்றம் சாட்டும் ரஷ்யா!

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளின் வங்கிக்கணக்குகள் பரிவர்த்தனை ஊடகங்களில் வெளியானதற்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தை ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் சிலரின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனை அமெரிக்க ஊடகங்களில் வெளியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக கூறப்படும் புகாரில் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், தூதரக அதிகாரிகளின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் வெளியானதற்கு அமெரிக்க அரசு காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் பரிவர்த்தனைகள் வெளிவந்திருக்காது என நம்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தூதரக அதிகாரிகளின் சுதந்திரத்தில் ஊடுருவும் இந்த செயல்பாடுகள், சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதாக உள்ளது. இதனை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

முகப்பு
Selva Zug 2