புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையுடம் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

இந்த மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என காலநிலை அவதான நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திவுலுபிட்டிய மற்றும் கொட்டதெனிய பிரதேசங்கள் ஊடாக நேற்று இரவு வீசிய கடும் காற்றால் அப்பகுதியல் உள்ள வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

மேலும் இதனால் அப்பகுதிகளில் உள்ள 70 வீடுகளுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

முகப்பு
Selva Zug 2