புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாகம்புர பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போரட்டம்!

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில் இருந்து விலக்கப்பட்ட பணியாளர்கள் ஆரம்பித்துள்ள சாகும்வரையிலான உண்ணாவிராத போரட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது 7 உறுப்பினர்கள் தொடர்ந்து உண்ணாவிராத போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அதன் ஏற்பாட்டாளர் புத்திக பிரசாத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் போது நோய் நிலைக்கு உள்ளான 4 பேர் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் சிகிச்சைப்பெற்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகப்பு
Selva Zug 2